உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

ஒதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொருளாகி மெய்ச்சோதியென்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.பொருள்: வேதங்களை அளித்தவனே! உலகிற்கு வழிகாட்டும் ஒளியே! மெய்யான ஜோதியே! வழிபடுவோரின் துன்பம் தீர்ப்பவனே! எங்கள் ஆதி இறைவனே! அகத்தியான்பள்ளியில் வாழும் சிவனே! நீதிவழியில் நின்று, உன்னைச் சரணடைந்தால் முன்வினை பாவம் நீங்கும். குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள அகத்தியான்பள்ளி சிவன் பற்றி சம்பந்தர் பாடிய பாடல்.