தைலப்பிரசாதம்
UPDATED : டிச 24, 2010 | ADDED : டிச 24, 2010
பெருமாள் கோயிலில் துளசியும், தீர்த்தமும் பிரசாதமாகத் தருவார்கள். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தர்ராஜப்பெருமாள் கோயிலில் இருக்கும் தன்வந்திரி சந்நிதியில் லேகியம் மற்றும் தைலத்தைப் பிரசாதமாகத் தருகின்றனர். நோயாளிகளுக்காக, அமாவாசை நாட்களில் இந்தப் பிரசாதத்தை வாங்கிச் செல்கின்றனர். இவர் மருத்துவக்கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.