உள்ளூர் செய்திகள்

ரவா லாடு

தேவையான பொருட்கள்சன்ன ரவை - 100 கிகடலை மாவு - 100 கிசர்க்கரை - 100 கிதேங்காய் - தேவையான அளவுமுந்திரிப்பருப்பு - 8நெய் - 200 கிகிஸ்மிஸ் - 10ஏலப்பொடி - சிறிதளவுஉப்புத்துாள் - சிறிதளவுசெய்முறைரவை, கடலை மாவை தனித்தனியாக சலித்துக் கொள்ளவும். கிஸ்மிஸ், முந்திரியை துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை சன்னமாக துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கிஸ்மிஸ், முந்திரியை தனித்தனியாக வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் பாதி நெய்யை விட்டு சூடானதும் ரவை சேர்த்து வாசனை வரும் பக்குவத்தில் வறுக்கவும். மீதி நெய்யை சூடாக்கி கடலை மாவையும் வறுக்கவும். இன்னொரு வாணலியில் சர்க்கரையை தேவையான தண்ணீர் விட்டு கம்பிப்பாகு பக்குவம் வரும் வரை சூடாக்கவும். இதற்கிடையில், கடலைமாவு, ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், உப்புத்துாள், ஏலப்பொடியை ஒன்றாக்கி கலவையாக்கவும். சர்க்கரைப்பாகில் கலவையை, கட்டிபடாமல் கிளறியபடி சேர்க்கவும்.சூடு ஆறும் முன் சிறு உருண்டைகளாக உருட்ட, சுவையான ரவா லாடு தயார்.