மத ஒற்றுமைக்குரிய வழிபாடு
UPDATED : நவ 11, 2010 | ADDED : நவ 11, 2010
எருமேலியில் ஐயப்பனின் நண்பர் வாபரின் பள்ளிவாசல் உள்ளது. எருமேலி செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளிவாசல் சென்று வணங்கிச் செல்கின்றனர். அங்கு பேட்டை துள்ளும் சடங்கை ஆரம்பிக்கின்றனர். எருமேலி தர்மசாஸ்தாவின் கோயில் திருவிழாவின் போதும் எருமேலியிலுள்ள இந்துக்கள் ஊர்வலமாக வாபர் பள்ளிவாசலுக்குச் சென்று காணிக்கையிடுகின்றனர். அதேபோல் வாபர் பள்ளி வாசலில் சந்தனக்கூடு திருவிழாவின் போது முஸ்லிம்கள் ஒன்றாக வந்து தர்மசாஸ்தா கோயிலில் காணிக்கை இடுகின்றனர். இது மத ஒற்றுமைக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சியாகும்.