உள்ளூர் செய்திகள்

அர்ச்சனைப் பூக்கள்

இளைஞர்கள் எளிதாக ஆன்மிகத் தகவல்களை தெரிந்துகொள்ளும் விதத்தில் இப்பகுதி வெளியாகிறது.1.புகழ்பெற்றகல்கருடன் எவ்வூரில் கோயில் கொண்டிருக்கிறார்?கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கோவில்2. சிவபெருமான் கணக்கராய் வந்து கோயில் கணக்கு எழுதிய தலம்...இன்னம்பூர் எழுத்தறிநாதர் (கும்பகோணம் அருகிலுள்ளது)3. சுக்கிரதோஷம் போக்கும் சிவன் அருளும் கோயில்...கஞ்சனூர் அக்னீஸ்வரர்4. மன்னார்குடியில்.... அழகு என்று சிறப்பித்துக் கூறுவர்.மதில் 5. வீணையின் நாதத்தை விட இனிய மொழி பேசும் அம்பிகை...யாழைப்பழித்த மொழியாள்(வேதாரண்யம்) 6. உயிரைப் பறிக்கும் கடவுளை ..... வடிவமாகக் குறிப்பிடுவர்.தர்மத்தின்வடிவம்(எமதர்மன்)7. அஷ்டதிக்கு பாலகர்களில் ஈசானன் எத்திசைக்கு உரியவர்?வடகிழக்கு8. வீட்டின் வழிபாட்டிற்குரிய தெய்வீக மூலைகள்....வடகிழக்கு, தென்மேற்கு9. ராமனின் வில்லின் பெயர்...கோதண்டம்10. தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் .... அம்சம்யோக அம்சம்