உள்ளூர் செய்திகள்

பாடுங்க! வள்ளி மாணாளனை பாடுங்க!

தைப்பூச நாயகன் முருகனை வழிபடும் விதத்தில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பக்தியுடன் படித்து, வள்ளி மணாளனின் நல்லருள் பெறுங்கள்.எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ சிந்தாகுல மானவை தீர்த்தெனையாள்கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே.ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும்மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்மதிவேண்டும் கருணை நிதி வேண்டும் நோயற்றவாழ்வு நான் வாழவேண்டும்தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்தவேளேதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே.பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றிமுன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றிகன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றிஎன்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி.முருகன் குமரன் குகனென்று மொழிந்துஉருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்பொருபுங் கவரும் புவியும் பரவும்குருபுங்கவ எண்குண பஞ்சரனே.உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிருகை கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே.அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன். முருகனே செந்தில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்நம்பியே கை தொழுவேன் நான். உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்கமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.