உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* எரியும் விளக்கின் திரியை கைவிரலால் துாண்டாமல், குச்சியை பயன்படுத்துங்கள். * கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்தை பித்தளை, தாமிரம், வெள்ளி பாத்திரங்களில் வைப்பது சிறப்பு. * பூஜையின் போது தாமிர பாத்திரத்தில் சந்தனம் வைக்க கூடாது. * பூஜையின் போது சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் தான் படைக்க வேண்டும். * சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷ விரதம் இருப்பவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. * வழிபாட்டில் தேங்காய், பழங்கள், பூக்கள், வாழை இலையை நேரடியாக தரையில் வைப்பது கூடாது. தாம்பாளத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.* சிவபெருமானுக்கு தாழம்பூவால் அர்ச்சனை, அலங்காரம் செய்யக் கூடாது.* துளசிச் செடியின் குச்சியை ஹோமத்தீயில் இடக் கூடாது.* இரவு உணவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர், கீரை இடம்பெறக் கூடாது. * ஹோமம், பூஜை நடத்திய பின்னும், உறவினரை வழியனுப்பிய பின்னும் நீராடக் கூடாது.