சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* பணத்திற்கும் குணத்திற்கும் சம்பந்தமேயில்லை. அதேபோல் படிப்புக்கும் சம்பாத்தியத்திற்கும் சம்பந்தமே இல்லை. * மனிதனாக பிறந்த அனைவரும் மனதை அடக்கி, தெய்வ நம்பிக்கையுடன் தர்மம் செய்து வர வேண்டும். * கோயில், வீடுகளில் செம்மண்ணால் கோலமிடுவது சூரியனின் செங்கதிர் ஒளியைக் குறிக்கும். மாக்கோலமிடுவது மகாலட்சுமியை அலங்கரிப்பதாகும். * சோகத்துடன் இருந்தால் மனதின் சக்தி குறையும். எனவே எப்போதும் நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். * வீடு, வாகனம், படுக்கை, ஆசனம், கிணறு, தோட்டம் ஆகியவை உரிமையாளரின் அனுமதி பெற்றுதான் பயன்படுத்த வேண்டும். மீறுவோர் உரிமையாளரது பாவத்தில் நான்கில் ஒரு பங்கை வாங்கிக் கொள்கிறார். * தேய்பிறையில் செவ்வாய்க் கிழமையோடு கூடின சதுர்த்தசி திதியில் கடலில் நீராடுவது சிறப்பு.* ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் முன்வினைப்பாவம் தீரும்.