உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* கல்வி, கலைச் செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவள் சரஸ்வதிதேவி. * கலைமகள், வாக்தேவி, வாகீஸ்வரி, மகா சரஸ்வதி, பாரதி, வாணி, சகலகலாவல்லி என சரஸ்வதியை போற்றுவர். * அனைத்து உயிர்களின் நாவிலும் இவள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம். * ஞானத்தை கொடுப்பதால் ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞான அமலி, ஞானி பிராட்டி என சிறப்பிக்கப்படுகிறாள். * கவிஞர்களின் நாவில் குடியிருப்பதால் நாமடந்தை, நாமிசைக் கிழத்தி, நாவுக்கரசி என அழைக்கப்படுகிறாள். * கிரேக்கர்கள் 'அதீனே' என்றும், ரோமானியர்கள் 'மினர்வா' என்றும் வழிபடுகின்றனர். * மூன்று முகங்களும் ஆறுகரங்களும் கொண்ட இத்தேவியை 'மஞ்ஜுஸ்ரீ' என பவுத்தர்களின் தந்திரநுால்கள் சொல்கின்றன. * சமண சமயத்தின் சிறந்த காவியமான சீவகசிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' எனும் பகுதியை திருத்தக்கதேவர் இயற்றியுள்ளார்.