உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. சூரசம்ஹாரத்திற்கு முன் முருகனுக்கு வாகனமாக இருந்த மயில்.......இந்திரமயில்2. சூரன் முருகனிடம் போர் புரிந்த போது ......ஆக மாறி நின்றான்.மாமரம் 3. ராமனுக்கு ஆஞ்சநேயர் போல, முருகனுக்கு யாரைக் குறிப்பிடுவர்? வீரபாகு 4. தெய்வானை யாரால் வளர்க்கப்பட்டாள்? இந்திரனின் யானையான ஐராவதத்தால்.5. தமிழ் இலக்கியத்தில் முருகனை..... என குறிப்பிடுவர்.சேயோன்(குழந்தைக் கடவுள்)6. 'குறிஞ்சிக் கிழவன்' என்பதன் பொருள்.......மலைக்குத் தலைவன். 7. முருகனின் வாகனங்கள் ...மயில், ஆடு, யானை . 8. முருகனைப் பற்றிக் கூறும் சங்கத்தமிழ் நூல்......பரிபாடல் 9. முருகனையே முழுமுதல் கடவுளாக வழிபடும் சமயம் .......கவுமாரம் 10. மந்திர விளக்கத்துக்காக முருகனிடம் தண்டனை பெற்றவர்...பிரம்மா.