சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : நவ 19, 2014 | ADDED : நவ 19, 2014
1. பாவை பாடிய வாயால் கோவை பாடியவர் யார்? (பாவை- திருவெம்பாவை, கோவை- திருக்கோவையார்) மாணிக்கவாசகர் 2. கயிலாயத்தில் சிவபெருமானுக்கு தொண்டு செய்தவர் யார்? ஆலாலசுந்தரர் 3. பக்தபிரகலாதன் முற்பிறவியில் யாராக இருந்தான்? சங்குகர்ணன் 4. மந்திர ரத்தினம் என்று போற்றப்படுவது... சுந்தர காண்டம் 5. அதிகாலை பொழுதை ஜோதிடத்தில் எப்படி குறிப்பிடுவார்கள்? கோதூளி லக்னம் (மிக சுபமான நேரம்) 6. திருமலை வேங்கடவனோடு சொக்கட்டான் ஆடிய பக்தர்... ஹாதிராம் பாபாஜி 7. ராமாயணத்தில் வரும் கரடிகளின் தலைவன்... ஜாம்பவான் 8. ராமனால் காட்டில் கொல்லப்பட்ட அரக்கியின் பெயர்... தாடகை 9. நமிநந்தியடிகள் தண்ணீரால் விளக்கேற்றிய தலம்.. திருவாரூர் அரநெறி 10. நினைத்தாலே முக்தி தரும் தலம்.. திருவண்ணாமலை