சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜன 06, 2015 | ADDED : ஜன 06, 2015
1. தமிழகத்தில் உள்ள ஜோதிர்லிங்கத் தலம்...... ராமேஸ்வரம் 2. 'ஏலாப்பொய்கள் உரைப்பான்' என ஆண்டாள் குறிப்பிடுவது ........ கிருஷ்ணர்3. வள்ளலார் வடலூரில் நிறுவிய சபை.... சத்திய ஞானசபை 4. நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலம்...... திருவெண்காடு(நாகப்பட்டினம் மாவட்டம்) 5. திருப்புகழின் பெருமையை உலகறியச் செய்தவர்........ வள்ளிமலை சுவாமிகள் 6. சிவனின் ஐந்து முகங்களில் மேல் நோக்கிய முகம்......... ஈசான முகம் 7. வியாசரின் பெற்றோர்........ பராசரர், சத்தியவதி 8. திருமால் முனிவர்களுக்கு தத்துவம் உபதேசித்த கோலம்........ ஹயக்ரீவர்(குதிரைமுகம் கொண்டவர்) 9. அத்திரி முனிவருக்கும், அனுசூயாவுக்கும் பிறந்தவர்....... தத்தாத்ரேயர் 10. சிவபெருமானின் அருவுருவ (உருவமும், அருவமும் கலந்த) வடிவம்........ லிங்கத் திருமேனி