உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

நாஸ்தி புத்திர யுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா!ந சாபாவயத: ஸாந்தி: அஸாந்தஸ்ய குத: ஸுகம்!!இந்த்ரி யாணாம் ஹி சரதாம் யந்ம நோநு விதீயதே!ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி!!பொருள்: மனம், ஐம்புலன்களையும் அடக்காதவனுக்கு நிலையான புத்தி இருக்காது. அப்படிப்பட்டவனின் மனம் ஒருமுகப்படாது. இவ்வாறு ஒருமுக பாவனை இல்லாதவர்களுக்கு அமைதி கிடைக்காது. அமைதியற்ற மனதில் சுகம் ஏது?. தண்ணீரில் போகும் ஓடத்தை, காற்று அடித்துக் கொண்டு போவது போல, சுகபோகங்களில் ஈடுபடும் போது எந்த புலனுடன் மனம் ஒட்டியிருக்கிறதோ, அந்த புலன் ஒன்றே புத்தியைக் கவர்ந்து விடும்.