உள்ளூர் செய்திகள்

பிரசாதம் இது பிரமாதம்

மைசூரு உளுந்தம்பொடி சாதம்தேவையான பொருட்கள்அரிசி - 100 கி உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்முந்திரிப்பருப்பு - சிறிதளவுதேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்நெய் - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் வத்தல் - 2அப்பளம் - 2கடுகு - அரை ஸ்பூன்பெருங்காயம் - சிறிதளவுகறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி முந்திரிப்பருப்பு, உளுந்தம் பருப்பை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுந்தம் பருப்பை, சன்ன ரவை போல பொடி செய்யவும். மிளகாயை கிள்ளி வைக்கவும். அரிசியை குழையாமல் பக்குவமாக வடித்துக் கொண்டு அதில் தேங்காய் துருவல், உளுந்தம்பருப்பு, உப்பு, சர்க்கரை, கறிவேப்பிலை, நெய் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் அப்பளத்தை பொரிக்கவும். அதன்பின் கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். சாதத்தில் பொரித்த அப்பளம், தாளிதம் சேர்த்து கிண்டவும். சுவையான சாதம் ரெடி.