இந்த நரசிம்மருக்கு புலிமுகம்
நரசிம்மர் என்றால் சிங்கமுகத்துடன் தானே இருப் பார்! நர (மனித) உடம்பும், சிம்ம (சிங்க) முகமும் கொண்டவர் என்பதால் தான் அவருக்கு 'நரசிம்மர்' என்றே பெயர் வந்தது. ஆனால், நரசிம்மருக்கு 32 வகையான முகங்கள் இருப்பதாக ஆகம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் வியாக்ர (புலி) முகம். விஜயவாடாவில் இருந்து 32 கி.மீ., தூரத்தில் சோபனாத்ரி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள மலையில் நரசிம்மர் புலி முகத்துடன் இருக்கிறார். இதே ஊரில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த இறைவனை 'வியாக்ரபுரீஸ்வரர்' என்கின்றனர். புலிமுகத்துடன் கூடிய நரசிம்மரையும், புலியின் பெயரைக் கொண்ட சிவனையும் ஒரு சேர வணங்கினால் மன தைரியம் அதிகரிக்கும்.நோய் தீர்க்கும் போர்வைசிவபெருமானுக்கு அபிஷேகப்பிரியர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. ஒவ்வொரு மாத பவுர்ணமியின் போதும் சிவாலயங்களில் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகமும், மாசி பவுர்ணமி அபிஷேகமும் சிறப்பானவை. திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில், மாசியில் நடைபெறும் அபிஷேகத்தின் போது நெய்யில் நனைத்த கம்பளி போர்வை ஒன்றினால் சிவலிங்கத்தைச் சுற்றிவிடுவர். இந்த அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் நோய்கள் நீங்கி குணம் பெறுவர் என்பது ஐதீகம்.