உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதரம் உபாஸ்மஹே!யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரப:!!பொருள்: யார் சூடிக்களைந்த மாலையை சர்வேஸ்வரரான மகாவிஷ்ணு விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டாரோ, அந்த பெருமாளின் பெருமை மிக்க அரசியான ஆண்டாள் நாச்சியாரை முதலில் வணங்குகிறேன். மனப்பாடப் பகுதிபெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்ததிருஆடிப்பூரத்தின் சீர்மை- ஒரு நாளைக்கு உண்டோ மனமே உணர்ந்து பார், ஆண்டாளுக்குஉண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.பொருள்: ஆடிப்பூரத்தின் பெருமை வேறெந்த நாளுக்கும் கிடையாது. ஆண்டின் மற்ற எந்த நாளுக்கும் இந்த சிறப்பு இல்லை. இந்த நன்னாளில், யாருக்கும் ஒப்புவமை இல்லாதவளும், பூமாலையையும், பாமாலையையும் பக்தியோடு பெருமாளுக்கு அளித்தவளும், பெரியாழ்வாரின் திருமகளுமான ஆண்டாளின் பெருமையை மனமே சிந்தித்துப் பார்ப்பாயாக.சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!1. ஆழ்வார் வரிசையில் இடம்பெறும் ஒரே பெண் ஆழ்வார்...ஆண்டாள்2. ஆண்டாள் யாருடைய அம்சமாய் பிறந்தார்?பூமிபிராட்டியார்3.ஆண்டாள்அவதரித்த கிழமைசெவ்வாய்4.ஆண்டாளுடைய பாடல்கள் ....என்று அழைக்கப்படுகின்றனநாச்சியார் திருமொழி5. யாருடைய தங்கையாக ஆண்டாளைப் போற்றுவர்?ராமானுஜர்6. ராமானுஜர் ஆண்டாளுக் காக நிறைவேற்றிய வேண்டுதல் என்ன?நூறு பானை அக்காரவடிசில் (அதிக நெய், நிறைய சர்க்கரை சேர்த்து சமைத்த சர்க்கரைப் பொங்கல் போன்ற ஒருவகை உணவு) சமர்ப்பித்தது7. ஆண்டாளின் நேர்த்திக்கடன் நிறைவேற்றிய தலம்....திருமாலிருஞ்சோலை(அழகர்கோவில்)8. திருப்பாவையில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?முப்பது9. ரங்கநாதரின் மாமனாராகப் போற்றப்படுபவர்....பெரியாழ்வார்10. ஆண்டாள் நாராயணனைத் திருமணம் செய்வது போல் கண்ட கனவுப் பாடல்கள் எதில் இடம்பெற்றுள்ளன?வாரணமாயிரம்.