இந்த வார ஸ்லோகம்
UPDATED : நவ 05, 2010 | ADDED : நவ 05, 2010
த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்!கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்குஹே ஸந்து லீநா மமாசேஷ பாவா!!பொருள்: கந்தனின் திருவுருவம் எப்போதும் நமது கண்களில் தெரியட்டும். காதுகளில் கந்தனின் புகழ் விழட்டும். அவனது தூய்மையான வரலாறை மட்டுமே வாய் பேசட்டும். அவனுக்கு மட்டுமே நமது கைகள் தொண்டு செய்யட்டும். அவனுக்கு பணிவிடை செய்யவே இந்த உடல் உதவட்டும். இப்படி என் எல்லாச் செயல்களும் முருகனைப் பற்றியதாகவே இருக்கட்டும். குறிப்பு: இந்த ஸ்லோகம், ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ளது.