இந்த வார ஸ்லோகம்
UPDATED : நவ 19, 2010 | ADDED : நவ 19, 2010
கந்தர்ப்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே!குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்!!பொருள்:கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்த அழகுடையவரும், மனம் விரும்பியதை தந்தருள்பவரும், வஜ்ராயுதத்தைக் கையில் தாங்கியிருப்பவரும், குமரக்கடவுளுமாகிய முருகப்பெருமானுக்கு மங்களம் உண்டாகட்டும்.மனப்பாடப்பகுதிதீபஒளி வழிபாட்டால் தீமையெல்லாம் ஓடும்தேவீ! உன் அருளாலே செல்வமெல்லாம் கூடும்பாபவழி இப்போதே பாழ்பட்டுப் போகும்பக்திமிகும் முக்திவரும்பரவசமே யாகும்.பொருள்: தீப ஒளியை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தீமையெல்லாம் பறந்துவிடும். அம்பாளின் அருள்கிடைப்பதால் செல்வம் பெருகும். செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைப்பதுடன், பக்திப் பரவசத்துடன் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.