இந்த வார ஸ்லோகம்!
UPDATED : டிச 02, 2014 | ADDED : டிச 02, 2014
மயூராதி ரூடம் மஹா வாக்ய கூடம்மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்!மஹீ தேவ தேவம் மஹா வேத பாவம்மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்!!பொருள்: மயிலை வாகனமாகக் கொண்டவனே! வேதம் போற்றும் மெய்ப்பொருளே! தேவாதி தேவனே! சிவபெருமானின் குமாரனே! அழகே வடிவானவனே! பக்தர்கள் உள்ளத்தில் நீங்காமல் வாழ்பவனே! உலகைக் காத்தருள்பவனே! கண்கண்ட தெய்வமே! அடியவர் துன்பம் போக்குபவனே! வேண்டும் வரம் அளிக்கும் தெய்வமே! உன்னைப் போற்றுகிறேன்.