உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸ்ரீமன் மங்களநாயகீ ஸஹசரம் கல்யா ஸந்தோஹதம் முக்தா முக்த ஸுரௌக வந்தித பதத்வந்த் வார விந்தம் முதா த்யாயேத் ஸந்ததமாதி நாயகமஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம் ஸ்ரீமத் திவ்ய ஸுதாகடேஸ்வரமஜம் க்ஷிப்ரப்ரஸாதப்ரதம் பொருள்:மங்களாம்பிகையுடன் இருப்பவரே! பற்றற்ற ஞானிகள், அறிவாளிகள், தேவர்களால் வணங்கப்படும் திருவடியைக் கொண்டவரே! படைத்தலுக்கு முதல் காரணமானவரே! ஆதி நாயகரே! பிறப்பற்றவரே! விரைவில் அருள்பவரே! அமிர்தகடேஸ்வரர் என்னும் கும்பேஸ்வரரே! தியானிக்கிறேன். குறிப்பு: ஜயமங்கள ஸ்தோத்திரம் நூலில், ஆதிகும்பேஸ்வரர் தியானம் என்ற தலைப்பில் உள்ளது.