வரலெட்சுமி விரத தகவல்கள்
* பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்தபின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும். * லட்சுமியின் அம்சம் துளசி. வீட்டில் துளசி மாடம் வைத்து சுற்றி வந்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.* வாழை, மாவிலை, எலுமிச்சம்பழங்களில் மகாலட்சுமி வசிக்கிறாள். * மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். இப்பிறவியில் செல்வ வளமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் தருபவள்.* லட்சுமிக்கு விருப்பமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.* தலைமுடியின் முன் வகிட்டில் லட்சுமி இருப்பதால் மணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வர்.* லட்சுமியின் அம்சமான நீரும், உப்பும் வீட்டில் குறைவின்றி இருக்க வேண்டும். * நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி செல்வத்தை வழங்குகிறாள். * மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.* அனைவருக்கும் நன்மை தருபவள் என்று மகாலட்சுமி குறித்து அதர்வண வேதம் சொல்கிறது. * வரலட்சுமி பூஜையன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்யம் செய்ய வேண்டும்.* வரலட்சுமி பூஜையில் அருகம்புல்லை துாவி வழிபட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.* சந்தனத்தில் லட்சுமி செய்து பூஜை செய்யலாம். ஆனால் மறுநாள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.* வரலட்சுமி பூஜையன்று புனித நதிகளில் நீராடினால் ஓராண்டு லட்சுமியை பூஜித்த புண்ணியம் கிடைக்கும். * சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.* வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.* மகாலட்சுமியை பூஜித்த இந்திரன் அஷ்ட ஐஸ்வர்யம், ஐராவதம் என்னும் யானை, அமராவதி நகரத்தை பெற்றார்.* பூரணகும்பம், மஞ்சள் குங்குமம், திருமண் சூர்ணம், கோலம் சந்தனம், வாழை மாவிலை தோரணம் வெற்றிலை, திருவிளக்கு யானை, பசு, கண்ணாடி உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி தங்கியிருக்கிறாள்.* மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்காததால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு* வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாக லட்சுமியாக மகாலட்சுமி இருக்கிறாள். * மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்பவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.* லட்சுமியை வழிபட்டால் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், புகழ் உண்டாகும்.