இந்த வாரம் என்ன
* ஏப்.6 பங்குனி 23: தெலுங்கு வருடப்பிறப்பு, சந்திர தரிசனம், ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர், பரமகல்யாணியம்மன் ரிஷப வாகனம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் தேர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலையில் காளிங்க நர்த்தனம், பகலில் ஆண்டாள் திருக்கோலம், இரவில் அனுமந்த வாகனம், கும்பகோணம் ராமர் சூரியபிரபையில் பவனி.* ஏப்.7 பங்குனி 24: குற்றாலம் குற்றாலநாதர் பூதவாகனம், அம்மன் சிம்ம வாகனம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடம், இரவு புஷ்ப பல்லக்கு, சமயபுரம் மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம், விருதுநகர் மாரியம்மன் கொடியேற்றம்.* ஏப்.8 பங்குனி 25: கார்த்திகை விரதம், குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரை திருவிழா ஆரம்பம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி, கரிவலம் வந்த நல்லுார் சுவாமி யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், கும்பகோணம் ராமர் காலை ஓலை சப்பரம், இரவு கருட வாகனம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணோற்ஸவம்.* ஏப்.9 பங்குனி 26: லட்சுமி கணேச விரதம், சதுர்த்தி விரதம், நேசநாயனார் குருபூஜை, குற்றாலம் குற்றால நாதர் தேர், ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் அன்ன, பூதத்தில் பவனி, சமயபுரம் மாரியம்மன் பூதவாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வெண்ணெய்தாழி சேவை, இரவு குதிரையில் ராஜாங்க சேவை, பட்டுக்கோட்டை நாடியம்மன் வெண்ணெய்தாழி சேவை. * ஏப்.10 பங்குனி 27: முகூர்த்தநாள், திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் தேர், நான்குனேரி வானமாமலைப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், நெல்லை, திருச்செந்துார், திருவையாறு, கும்பகோணம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை கோயில்களில் சித்திரை உற்ஸவம் ஆரம்பம், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி விழா, மதுரை மீனாட்சி சொக்கநாதர் காமதேனு, கைலாச வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தேர். * ஏப்.11 பங்குனி 28: கணநாத நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப்பல்லக்கு, சமயபுரம் மாரியம்மன் ரிஷப சேவை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப்பெருமாள், திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி தலங்களில் உற்ஸவம் ஆரம்பம், துாத்துக்குடி சிவன் பூதவாகனம், அம்மன் சிம்ம வாகனம், கும்பகோணம் ராமர் சூர்ணாபிேஷகம்.* ஏப்.12 பங்குனி 29: முகூர்த்த நாள், சந்தான சப்தமி, அசோக அஷ்டமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரை வாகனத்தில் வேடர்பறி லீலை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் காலை அம்ச வாகனம், இரவு சூரிய பிரபையில் பவனி, கும்பகோணம் ராமர் வெண்ணெய்தாழி சேவை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்று உற்ஸவம், திருக்கடையூர் சிவன் திருக்கல்யாணம், ஏகாந்தசேவை, பட்டுக்கோட்டை நாடியம்மன் தேர்.