இந்த வாரம் என்ன
ஏப்.13 பங்குனி 30: ஸ்ரீராம நவமி, முனையடுவார் குருபூஜை, நெல்லை குறுக்குத்துறை முருகன் மயில் வாகனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித லீலை, குற்றாலம், கோவில்பட்டி கோயில்களில் தேர், உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அன்ன வாகனம்.ஏப்.14 சித்திரை 1: தமிழ் புத்தாண்டு, விஷு புண்ணிய காலம், சகல சிவன் கோயில்களில் விஷு தீர்த்தம், நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் 5,008 கனி அலங்காரம், திருச்செந்துார் சண்முகர் அன்னாபிஷேகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் யாளி, நந்திகேஸ்வர வாகனம்.ஏப்.15 சித்திரை 2: ஏகாதசி விரதம், நெல்லை குறுக்குத்துறை முருகன் உருகு சட்ட சேவை, மாலை தங்க சப்பரம், மதுரை மீனாட்சி பட்டாபிேஷகம், அழகர்கோவில் கள்ளழகர் கோடை உற்ஸவம் ஆரம்பம், திருச்சி, சீர்காழி, திருப்பனந்தாள் சிவன் திருக்கல்யாணம், துாத்துக்குடி நடராஜர் உருகு சட்ட சேவை.ஏப்.16 சித்திரை 3: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி தபசுக்காட்சி, மதுரை மீனாட்சி திக்விஜயம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் வேணுகோபாலர் திருக்கோலம், துாத்துக்குடி நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு, சுவாமி குதிரை வாகனம், சிவகாமியம்மன் கிளி வாகனம்.ஏப்.17 சித்திரை 4: முகூர்த்த நாள், பிரதோஷம், சிருங்கேரி வித்யாரண்ய சுவாமி ஆராதனை, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், இரவு பூப்பல்லக்கு, திருப்பரங்குன்றம் முருகன் மதுரைக்கு எழுந்தருளல், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சிவபூஜை.ஏப்.18 சித்திரை 5: முகூர்த்த நாள், உத்தரகோசமங்கை சிவன் திருக்கல்யாணம், மதுரை, திருச்சி, சங்கரநயினார் கோயில், கடையம், திருப்பனந்தாள், துாத்துக்குடி, சீர்காழி, திருக்கடையூர் சிவன் கோயில்களில் தேர், அழகர்கோவில் கள்ளழகர் மதுரையில் எதிர்சேவை.ஏப்.19 சித்திரை 6: சித்ரா பவுர்ணமி, நயினார் நோன்பு, இசை ஞானியார் குருபூஜை, மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம், மதுரை வைகயைாற்றில் அழகர் எழுந்தருளல், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரிஷப வாகனம், நான்குநேரி வானமாமலைப் பெருமாள், உத்தரகோசமங்கை சிவன் தேர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உற்ஸவம் ஆரம்பம், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை.