உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஆக.24, ஆவணி 7: திருச்செந்துார் முருகன் கோயிலில் குடவருவாயில் ஆராதனை, மயில் வாகனம், பிள்ளையார்பட்டி, தேரெழுந்துார், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர் தலங்களில் விநாயகர் சதுர்த்தி உற்ஸவம், மதுரை நவநீத கிருஷ்ணசாமி உற்ஸவர் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனிஆக.25, ஆவணி 8: முகூர்த்த நாள், மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி சஷே வாகனத்தில் உறியடி உற்ஸவம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயம், இரவு வெள்ளி சிம்ம வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்ஆக.26, ஆவணி 9: ஏகாதசி விரதம், திருச்செந்துார் முருகன் உருகுச்சட்ட சேவை, மாலை தங்க சப்பரம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி உற்ஸவம் ஆரம்பம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூதவாகனம், மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராம அவதாரக் காட்சி, மிலட்டூர் விநாயகர் வீதியுலா, கரிநாள்ஆக.27, ஆவணி 10: திருச்செந்துார் முருகன் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி அலங்காரம், மதுரை நவநீத கிருஷ்ணர்சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை, சஷே வாகனத்தில் நாராயணர் திருக்கோலம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனம்ஆக.28, ஆவணி 11: முகூர்த்த நாள், பிரதோஷம், மாத சிவராத்திரி, நெல்லை சந்தி விநாயகர் வருஷாபிஷேகம், திருச்செந்துார் முருகன் காலை வெள்ளி சப்பரம், இரவு வெள்ளை சாத்தி வெள்ளிக் குதிரையில் பவனி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயம், இரவு ரிஷப வாகனம், மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ரங்கநாதர் திருக்கோலம், மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனம்ஆக.29, ஆவணி 12: அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை, போதாயன அமாவாசை, மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ராமாவதாரம், மாலை தவழும் கண்ணன் திருக்கோலம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் வீதியுலா, உப்பூர் விநாயகர் ரிஷப வாகனம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயம், மாலை கஜமுக சம்ஹாரம்ஆக.30, ஆவணி 13: அமாவாசை விரதம், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், இளையாங்குடி மாறர் குருபூஜை, திருச்செந்துார் முருகன் தெப்பம், மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணர் அலங்காரம், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கண்ணன் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனம்