உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன.10, மார்கழி 25: பவுர்ணமி, வடசாவித்ரி விரதம், ஆருத்ரா தரிசனம், சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேகம், ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகருக்கு சிவன் உபதேசக் காட்சி, சிதம்பரம் நடராஜர் சிதம்பர ரகசிய பூஜை, திருநெல்வேலி நெல்லையப்பர் தாமிர சபா நடனம், திருவாலங்காடு சிவன் ரத்தின சபா நடனம், சடையநாயனார் குருபூஜை, உத்திரகோசமங்கை கூத்தபிரான் நடனம்ஜன.11, மார்கழி 26: வனசங்கரி பூஜை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் முத்தங்கி சேவை, கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி அனுமன் வாகனத்தில் உலா, பத்ராசலம் ராமர் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ராப்பத்து உற்ஸவ சேவை, திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனைஜன.12, மார்கழி 27: கூடாரை வல்லி உற்ஸவம், காஞ்சிபுரம், திருவள்ளூர் கோயில்களில் திருவாய்மொழி உற்ஸவம், திருமயம் சத்திய மூர்த்தி பவனி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம், கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளியானை வாகனம், திருவண்ணாமலை, திருவையாறு சிவன் பவனி, சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்ஜன.13, மார்கழி 28: சங்கடஹர சதுர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தங்கப்பல்லக்கு, கும்பகோணம் சாரங்கபாணி சூர்ணாபிஷேகம், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவர் ராப்பத்து உற்ஸவம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்ஜன.14, மார்கழி 29: போகி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆளேறும் பல்லக்கில் பவனி, கும்பகோணம் சாரங்கபாணி வெண்ணெய் தாழிசேவை, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, ஸ்ரீபெரும்புதுார், கடலுார் மாவட்டம் நல்லாத்துார் வரதராஜர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் ராப்பத்து உற்ஸவம், திருநெல்வேலி நெல்லையப்பர் லட்ச தீபக் காட்சிஜன.15, தை 1: உத்ராயண புண்ணிய காலம், தைப்பொங்கல், தியாகபிரம்ம ஆராதனை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கல்யானைக்கு கரும்பு கொடுத்த லீலை, ஸ்ரீரங்கம் பெருமாள் திருப்பாவை சாற்றுமுறை, திருநெல்வேலி நெல்லையப்பர் அயன தீர்த்தம், கும்பகோணம் சாரங்கபாணி தேர், சபரிமலை மகரஜோதி, கரிநாள்ஜன.16, தை 2: மாட்டுப் பொங்கல், மதுரை செல்லத்தம்மன் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, மருதமலை படித்திருவிழா, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், கூரத்தாழ்வார் திருநட்சத்திரம், கரிநாள்