இந்த வாரம் என்ன
ஜூலை 17, ஆடி 2: நயினார்கோவில் சவுந்திரநாயகி ராஜாங்க அலங்காரம், கரிநாள், லட்சுமி வழிபாட்டு நாள், லட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்ஜூலை 18, ஆடி 3: மகா பிரதோஷம், சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மானை ஆடிவரும் திருக்கோலம், நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் வேணுகோபாலன் அலங்காரம்ஜூலை 19, ஆடி 4: மாத சிவராத்திரி, நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் சிவபூஜை, நயினார்கோவில் சவுந்திரநாயகி வேணுகான கிருஷ்ணர் அலங்காரம், சூரிய வழிபாட்டு நாள், சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்ஜூலை 20, ஆடி 5: ஆடி அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல், அமாசோம பிரதட்சிணம், அரசமரத்தை வலம் வந்து வழிபடுதல், சதுரகிரி மகாலிங்க சுவாமி சிறப்பு வழிபாடு, நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரம், சந்திரன் வழிபாட்டு நாள்ஜூலை 21, ஆடி 6: திருவாடானை சினேகவல்லி வெண்ணெய் தாழி சேவை, நயினார்கோவில் சவுந்திரநாயகி வீணை கான சரஸ்வதி அலங்காரம், செவ்வாய் வழிபாட்டு நாள், முருகன், துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுதல்ஜூலை 22, ஆடி 7: சந்திர தரிசனம், நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவபூஜை, புதன் வழிபாட்டு நாள், நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்ஜூலை 23, ஆடி 8: சுவர்ண கவுரி விரதம், குரு வழிபாட்டு நாள், தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தியும், குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தியும் வழிபடுதல்