பெரியவர் கொடுத்த பிச்சை
UPDATED : அக் 14, 2016 | ADDED : அக் 14, 2016
சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் காஞ்சிப்பெரியவரின் தீவிரபக்தர். இவர் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக பெரியவரைச் சந்தித்து ஆசியும் பெற்றார். சில ஆண்டுகளிலேயே சென்னை ராமாபுரத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் ஆளுக்கொரு பெயரைக் கூறினர். சந்தான கோபாலனோ அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. காஞ்சிபுரம் மடத்திற்குச் சென்று பெரியவரைச் சந்தித்தார். பெரியவரும் பிரசாதம் கொடுத்து, 'சந்தோஷமா இரு' என்று வாழ்த்தினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய சந்தான கோபாலன், “வீட்டிற்குப் 'பெரியவா பிச்சை' என பெயர் வைத்துள்ளேன். தங்கள் அருளாசி வேண்டும்” என்று கேட்டார். பெரியவரும் கோபாலனுக்கு ஆசியளித்தார். உன்னத இசை மேதையாக இவர் திகழ்வதற்கும் பெரியவரின் அருளாசியே காரணம்.