உள்ளூர் செய்திகள்

ஆசை தேவையா...

'நல்லா இருக்கீங்களா?' என யாரைக் கேட்டாலும் ஏதோ குறையைச் சொல்லிக் கொண்டிருப்பர். இதைப் பற்றி காஞ்சி மஹாபெரியவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம். 'கஷ்டம் நமக்கு ஏன் வருகிறது? அதற்குக் காரணம் நம் உடம்பு. 'சரி... உடம்பை விட்டுடலாம்ன்னு ஆற்றிலோ, கிணற்றிலோ விழுந்து சாகலாம் என்றால் அது குற்றம். பாவமும் கூட.இந்த உடம்பு போனாலும் இன்னொரு உடம்பு வந்து விடும். பிறவியில் இருந்து யாரும் தப்ப முடியாது. உடம்பு எதனால் வருகிறது என ஆராய்ந்து அது வராமல் இருக்க வழி செய்ய வேண்டும். முன்பு குற்றம் செய்தவனுக்கு தண்டனையாக கசையடி இருந்தது. அதை நிறைவேற்ற ஓரிடத்தில் குற்றவாளியை கட்டி வைப்பர். அத்தனை அடிகளையும் ஒரேயடியாகக் கொடுத்தால் அவன் செத்து விடுவானே என அருகில் மருத்துவரை வைத்துக் கொள்வர். அடி பலமாக இருக்க வேண்டும். அதே சமயம் அவன் சாகவும் கூடாது. மருத்துவர், 'இன்றைக்கு இத்தனை அடி' எனச் சொன்னால் அத்தனை அடிதான் ஒருநாளைக்கு. அப்புறம் உணவும், ஓய்வும் கொடுத்து விட்டு மீண்டும் அடி தொடரும். இந்த மாதிரி முற்பிறவியில் செய்த குற்றத்திற்கான துன்பத்தை அனுபவிக்க இந்த உடம்பைப் கொடுக்கிறார் பகவான். இது தாங்கும் வரையில் துன்பம் ஏற்படும். எஞ்சிய துன்பத்தை அனுபவிக்க இன்னொரு உடம்பைக் கொடுப்பார். சந்தோஷம் என்பது எப்போதோ கொஞ்சம் வேப்பங்காயில் தித்திப்பு போல வரும். நுாற்றுக்கு 90 பேர் சிரமத்தில் தான் இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக ஏதோ ஒரு தவறு செய்து இருக்கிறோம். நல்லது, கெட்டது என கலந்து செய்து இருப்பதால் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் துக்கம் என மாறி மாறி வருகிறது. உடம்பு இல்லாமல் போக வேண்டும் என்றால் என்னதான் செய்ய வேண்டும்?உடம்பு வந்ததற்கு என்ன காரியம் செய்தோமோ அதை செய்யாமல் இருந்தால் உடம்பு வராது. உடம்பு வந்ததற்கு என்ன காரணம்?ஆசை... அலை போலே நம்மை தாக்குகிறது! ஆசையே கூடாது என நினைத்தாலும் ஒரு கட்டத்தில் நம்மை மீறி வெறியாகி விடுகிறது. அதனால் கெட்ட செயலை செய்கிறோம். காமம், கோபம் இரண்டும் வெறியாக நம்மை அடிமைப்படுத்தி செயல்பட வைக்கின்றன. இந்த இரண்டும் இருக்கும் வரை பிறவி என்னும் நோய் நம்மை தொடரத்தான் செய்யும். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும். * குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து. * நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்