உள்ளூர் செய்திகள்

பகவத்கீதையும் திருக்குறளும் - 14

மனச்சுத்தம் போதும்ஒரு ஞாயிறன்று தாத்தாவைக் காண வந்தான் கந்தன். ''தாத்தா... என் பக்கத்து வீட்டுக்கார மாமா, 'சாமியார் ஒருவரைக் கைது பண்ணி இருக்காங்க.. அவர் நிறைய தப்பு பண்ணி இருக்காரு' அப்பிடின்னு சொன்னாரு. ஆனால் நீங்கதான் சொன்னீங்க சாமியார்கள் தியானம், தவம் செய்வாங்கன்னு. இப்போ அவர் அதை சரியா செய்யலையா? இவங்களைப் பற்றி பகவத்கீதை, திருக்குறளில் ஏதாவது இருக்கா'' எனக் கேட்டான். பகவத் கீதையில் 3 ம் அத்தியாயம் 6ம் ஸ்லோகத்தில்கர்மேந்த்³ரியாணி ஸம்'யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் ।இந்த்³ரியார்தா²ன்விமூடா ௪த்மா மித்²யாசார: ஸ உச்யதே ॥ கண், காது, மூக்கு, நாக்கு, மெய்(உடம்பு) ஆகிய ஐம்புலன்களை அடக்கியது போல தோன்றினாலும், எப்போதும் அவற்றைப் பற்றி சிந்திப்பவன் மூடன். அவன் பொய்யான ஒழுக்கம் கொண்டவன் என்கிறார் பகவான் கிருஷ்ணர். திருவள்ளுவரும் 276 வது குறளில்நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல்மனதில் எழும் ஆசைகளைச் சிறிதும் துறக்காமல் வெளியுலகில் துறவியைப் போல சிலர் வஞ்சனை எண்ணத்துடன் வாழ்கிறார்கள். இவர்களைப் போல இரக்கமற்றவர் வேறொருவர் கிடையாது என்கிறார். வெளித்தோற்றத்தில் சாமியார் போல வேஷமிடுபவர்கள் ஆஷாடபூதிகள். அதாவது பொய்யான நடத்தை கொண்டவர்கள். மனத்துாய்மையே துறவுக்கு அடிப்படை பண்பு. வெளித்தோற்றம் உள்ளிட்ட மற்றவை எல்லாம் அடுத்தபடி தான்'' என்றார் தாத்தா. -தொடரும்எல்.ராதிகா97894 50554