உள்ளூர் செய்திகள்

கடவுளை அடைய...

 'உயிர்களில் மகத்தானது மனிதப்பிறவி. இதை உணர்ந்து பக்தியில் ஈடுபட்டால் மோட்சத்தை அடைவாய்' என்கிறார் ஆதிசங்கரர். அதை தன் பாடல் ஒன்றில் 'ஜந்துானாம் நரஜன்மம் துர்லபம்' என குறிப்பிடுகிறார். காஞ்சி மஹாபெரியவர் இதை அடிக்கடி உச்சரிப்பார். மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம் தனித்தன்மை கொண்டவை. உதாரணமாக குதிரையின் கால்கள் வேகமாக ஓடும் விதத்தில் உள்ளன. சிங்கத்தின் பலமும், கர்ஜனையும் காண்பவரை பிரமிக்கச் செய்யும். குளிர், மழையை தாங்கும் விதத்தில் ஆட்டின் ரோமம் இருக்கும். துாரத்தில் இருந்துவரும் வாசனையை கண்டுபிடித்து விடும் எறும்பு. இன்னிசையாக பாடும் குயில். ஞாபக சக்தி கொண்ட யானை. தங்கள் வாழும் இடத்தை விட்டு நீண்ட துாரம் சென்றாலும், மீண்டும் அதே இடத்திற்கு வரும் நத்தை. இரக்க குணம் கொண்ட டால்பின்கள்.அப்படி என்றால் மனிதன் எந்த விதத்தில் உயர்ந்தவன்? விலங்குகளுக்கு வசதிகளைக் கொடுத்த கடவுள், எந்த வசதியையும் மனிதனுக்கு தரவில்லை. ஆனால் வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் அறிவை தந்திருக்கிறான். அதனால் தான் வேகமாக ஓடும் குதிரையில் சவாரி செய்கிறான். சிறிய கம்பை வைத்துக் கொண்டு சிங்கத்தையே அடக்குகிறான். ஆட்டின் ரோமத்தில் இருந்து தன் குளிரைப் போக்க ஆடை தயாரித்துக் கொள்கிறான். அதனால் தான் மனிதனை புத்திசாலி எனப் பாராட்டுகிறோம். இதனால் தான் மனிதப்பிறவி கிடைப்பது உயர்ந்தது என்கிறோம். ஆனால் எந்த ஒரு உயிரும் மற்றொரு உயிரை ஏமாற்றிப் பிழைப்பதில்லை. மனிதனோ எல்லோரையும் ஏமாற்றுகிறான். மனிதனைத் தவிர வேறெந்த உயிரும் எதிர்காலத்தை எண்ணி பயப்படுவதில்லை. நேர்மையாக வாழுங்கள். அப்போது தான் கடவுளை அடைய முடியும்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய். * கஷ்டம் தீர குலதெய்வத்திற்கு விளக்கேற்று.* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.* ஆடி, புரட்டாசி, தை அமாவாசை அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com