உள்ளூர் செய்திகள்

மஹாபெரியவரும் தமிழ்த்தாத்தாவும்

ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மடத்திற்கு வந்தார். தமிழ் இலக்கியமான தஞ்சைவாணன் கோவை பற்றி பேச்சு வந்தது. தஞ்சாக்கூர் பகுதியை ஆட்சி செய்த மன்னர் தஞ்சைவாணன். புலவர்களுடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டவர். ஒருமுறை மன்னர் இல்லாத நேரத்தில் சில புலவர்கள் அரண்மனைக்கு வந்தனர். அப்போது மகாராணி மட்டும் இருந்தாள். இலக்கிய ஈடுபாடு கொண்ட அவள் புலவர்களைப் பாடச் சொன்னாள். 'வள்ளல் குணம் கொண்ட மன்னருக்கு சளைத்தவள் இல்லை' என்பது போல பாடி முடித்த அவர்களுக்கு தங்கத்தால் ஆன தேங்காய், பழம் வைத்து தாம்பூலம் கொடுத்தாள். அதை பார்த்த புலவர்களுக்கு மயக்கம் வராத குறை. மகாராணியை வணங்கி விட்டு புறப்பட்டனர். புலவர்கள் புறப்படும் நேரத்தில் மன்னர் எதிரில் வந்தார். அவர்களை கவுரவித்த விதம் பற்றி 'யாரை எப்படி கவுரவப்படுத்த வேண்டும் எனத் தெரியாதா?' எனக் கோபித்தார். தங்கத் தேங்காயைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டார். 'கருவூலத்தில் இருந்து சன்மானம் வரும் வரை காத்திருங்கள்' என்றார். புலவர்கள் முகம் வாடியது. 'தங்கத்தேங்காய் போச்சே... என வருத்தப்பட்டனர். சற்று நேரத்தில் சன்மானம் வந்தது. ஆனாலும் அவர்கள் வேண்டா வெறுப்பாக பார்த்தனர். ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கத் தேங்காயைப் பார்த்ததும் அவர்களுக்கு தலைசுற்றாத குறைதான்... சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்கள். தஞ்சைவாணன் ஆட்சி நடத்திய பகுதி மானாமதுரை அருகிலுள்ள தஞ்சாக்கூர் என உ.வே.சா., தெரிவித்தார். இதன் பின் காஞ்சி மஹாபெரியவர், 'ஆமாம்... இந்த சம்பவம் உண்மையானதுதான். அதற்கான ஆதாரம் மடத்திலேயே இருக்கிறது. தஞ்சாக்கூருக்கு தெற்கில் புலவர்சேரி என்னும் கிராமம் உள்ளது. அதை மடத்துக்கு தானமாக வழங்கியவர் சிவகங்கை மன்னர். அதற்கான சாசனமும் உள்ளது' என்றார்.காஞ்சி மஹாபெரியவருக்கு தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஈடுபாட்டை அறிந்து தமிழ்த்தாத்தா உ.வே.சா., மனம் நெகிழ்ந்தார். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* கோயிலில் சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆயுள் கூடும். * பாவம் தீர 'ஸ்ரீராமஜெயம்' மந்திரம் எழுதுங்கள். * பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையால் அலங்காரம் செய்யாதீர்கள். * நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம். உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com