உள்ளூர் செய்திகள்

பார்வை ஒன்றே போதுமே...

காஞ்சி மஹாபெரியவரின் பக்தரின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது. திடீரென சாப்பிடவும், குரைக்கவும் அந்த நாயால் முடியவில்லை. என்ன செய்தும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. சாப்பிடாததால் நாய் மெலிய ஆரம்பித்தது. இந்த நிலை நீடித்தால் நிலைமை மோசமாகுமே என வருந்தினார் பக்தர். ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தார். காஞ்சி மஹாபெரியவரின் திருவுருவப் படத்தை எதேச்சையாக பார்த்தார். மனதிற்குள் 'குருவருளால் எல்லாம் சரியாகும்' என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நாயைக் காரில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் மடத்திற்கே புறப்பட்டார். அன்று கைங்கர்யம் செய்து கொண்டிருந்த தொண்டர் ஒருவரிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் சுவாமிகளிடம் தெரிவித்தார். 'நாயுடன் மடத்திற்குள் வந்தால் பலருக்கும் சிரமமாக இருக்கும். நாய் இருக்கும் இடத்துக்கு நான் வர்றேன்' என்றார் மஹாபெரியவர். அங்கிருந்த பக்தர்களும் சுவாமிகளை பின்தொடர்ந்தனர். மடத்து வாசலில் நின்ற காரின் கதவைத் திறந்தார் பக்தர். சுவாமிகளின் முன்பு நாய் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அமர்ந்தது. பக்கத்தில் நின்ற சீடரிடம், 'தோல் செருப்பு ஒன்றைக் கொண்டு வா' என்றார். அதுவும் வந்தது. அதை நாயின் ஒரு பக்கமாக வைக்கச் சொன்ன மஹாபெரியவர், 'கிண்ணம் நிறைய பால் கொண்டு வா' என்றார். அதுவும் நாயின் முன் வைக்கப்பட்டது. அப்போது நாயைப் பார்த்து, 'சாப்பிடு' என ஜாடை காட்டியபடி உன்னிப்பாக பார்த்தார். சுவாமிகளின் அருட்பார்வையால் துவண்டு கிடந்த நாய் மெல்ல பாலைக் குடித்தது. ஓரிரு நிமிடம் கழிந்ததும் 'வள் வள்' என குரைக்கவும் செய்தது. பாலைச் சாப்பிட்டதோடு, நாய் குரைக்கவும் செய்வதைக் கண்ட பக்தர் மகிழ்ச்சியில் குதித்தார். 'சில தீய சக்தியால நாய்க்கு இப்படி ஆவதுண்டு. இனி பயம் வேண்டாம். நிம்மதியாக இருக்கலாம்' என சொல்லி விட்டு மடத்திற்குள் சென்றார் மஹாபெரியவர். நாயை குணப்படுத்தும் முறையை மஹாபெரியவர் எங்கு கற்றார் என்பது காஞ்சி காமாட்சிக்கே வெளிச்சம்!காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள். * மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள். * தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதே.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com