உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 18

ராஜபோகம் அருளும் வர கணபதிஉயிர்களுக்கு அவற்றின் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை கொடுத்து, பிறவிகளில் வெறுப்பை ஏற்படுத்தி, மேலான சிவஞானத்தை அளித்து அதன் வாயிலாக வீடுபேற்றை அருளும் கணபதி இவர். அந்த வரத்தைத் தருவதாலேயே இவர் வர கணபதி எனப் போற்றப்படுகிறார். இவர் மடியில் வீற்றிருக்கும் புஷ்டி தேவி, வீடுபேற்றை அருள்பவள். மொத்தம் நான்கு கரங்களோடும் அன்னையோடும் எழுந்தருளியிருப்பவர் இந்த கணபதி.தியான சுலோகம்ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம் ஹஸ்தே ச பாசாங்குஸௌ -பிப்ராணம் மதுமத் கபாலம் அநிசம் ஸார்த்விந்து மௌளிம் பஜே! புஷ்ட்யா ச்லிஷ்ட தநும் த்வஜாக்ர கரயா பத்மோல் லஸத் தஸ்தயா -தத்'யோந்யாஹித பாணிமாத்த வசுமத் பாத்ரோல் லஸத் புஷ்கரம் ||ஸிந்துாராபம் - வெளிறிய சிவந்த நிறம் உடையவரும்இபாநநம் - யானை முகத்தை உடையவரும்த்ரிநயநம் - முக்கண்களைக் கொண்டவரும்ஹஸ்தே ச - (ஒவ்வொரு) கையிலும்பாச - பாசம்அங்குச: - அங்குசம்மதுமத் கபாலம் - மதுரசம் (பழச்சாறு) நிறைந்த கிண்ணம் (ஆகியவற்றை)பிப்ராணம் - தாங்கியிருப்பவரும்அநிசம் - எப்போதும்ச அர்த்த இந்து மௌளிம் - பாதி வடிவிலான பிறையை அணிந்திருப்பவரும்த்வஜாக்ர கரயா - ஒரு கையில் கொடியை ஏந்தியிருப்பவளும்பதிமோல்லஸத் அஸ்தயா - இன்னொரு கையில் தாமரை மலரை ஏந்தியிருப்பவளுமானபுஷ்ட்யா - புஷ்டி என்னும் பெயருள்ள தேவியால்ஆச்லிஷ்ட தநும் - தழுவப்பட்ட திருமேனியை உடையவரும்தத்யோந்யாஹித பாணிம் - அத்தேவியின் யோனியில் கையை வைத்திருப்பவரும்வசுமத் பாத்ர - நிதி நிறைந்த ரத்ன கும்பத்தைஆத்த - ஏந்தியஉல்லஸத் புஷ்கரம் - விளங்குகின்ற துதிக்கையைக் கொண்டவருமான வர கணபதியைபஜே - வணங்குகிறேன்.பாசம், அங்குசம் - உயிரின் ஆணவ மலத்தை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தைக் குறிப்பது அங்குசம்.பழச்சாற்றுக் கிண்ணம் - மாதுளம், திராட்சை உள்ளிட்ட பழங்களின் சாறுகள் நிறைந்த கிண்ணம். சிவஞானத்தைக் குறிப்பது.புஷ்டி - வளமையைக் குறிப்பவள் இந்த அன்னை. உயிர்களுக்கு வீடுபேறு அருளும் இறைவனின் அருள் வடிவம் இந்த தேவி.ரத்ன கும்பம் - அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை உணர்த்துகிறது.பலன்: வளமை, செல்வம், ராஜபோகம், வேண்டிய வரம் கிடைக்கும்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்