உள்ளூர் செய்திகள்

சம்பா சஷ்டி

சம்பா என்னும் அசுரன் தன்னை யாரும் கொல்லக் கூடாது என்றும், அப்படி கொல்ல முயன்றால் உடம்பில் இருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் அசுரனாக மாற வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன்பின் ஆணவத்தால் எல்லா உயிர்களையும் துன்புறுத்தினான். நாய் வாகனத்துடன் பைரவர் கோலத்தில் வந்த சிவன் திரிசூலத்தால் அசுரனைக் கொன்றார். சிந்திய ரத்தத்தை பைரவரின் நாய் குடித்ததால் அசுரர்கள் பெருகுவது தடுக்கப்பட்டது. அந்நாளையே சம்பா சஷ்டி என பைரவர் கோயில்களில் கொண்டாடுகின்றனர்.