உள்ளூர் செய்திகள்

தந்தத்தால் வென்ற "தங்கம்

பண்டாசுரனை வதம் செய்ய லலிதாம்பிகை தன் படையுடன் புறப்பட்டாள். சக்தி சேனையும் அவளுடன் புறப்பட்டது. பண்டாசுரனின் உதவியாளன் விசுக்ரன் என்பவன் 'விக்ன யந்திரம்' என்னும் அஸ்திரத்தை சக்திசேனை மீது ஏவினான். அதன் மாயசக்தியால் படையினர் அனைவரும் தூங்க ஆரம்பித்தனர். விக்ன யந்திரத்தின் சக்தியை அழிப்பதற்காக, தேவி தன்னை காமேஸ்வரியாக உருமாற்றி புன்னகைத்தாள். அவளின் புன்முறுவலைக் கண்ட சிவன் காமேஸ்வரராகத் தோன்றினார். இருவரின் அருட்திறத்தால் விநாயகர் அவதரித்தார். இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் 'லலிதோ பாக்யானத்தில்' இடம் பெற்றுள்ளது.ஆனைமுகனும் தன் பெற்றோரை வணங்கி, போருக்குப் புறப்பட்டார். தன் தந்தத்தால் விக்ன யந்திரத்தை தவிடு பொடியாக்கினார். அதன்பின் சக்திசேனை மயக்கம் நீங்கி விழித்தது. லலிதாம்பிகை பண்டாசுரனை வதம் செய்தாள்.