உள்ளூர் செய்திகள்

பருக்கை

அள்ள அள்ள குறையாத உணவளிக்கும் அட்சய பாத்திரம் பாண்டவர்களிடம் இருந்தது.ஒருநாள் அதன் மூலம் அனைவருக்கும் உணவிட்ட திரவுபதி, தானும் சாப்பிட்டு பாத்திரத்தை கழுவினாள். இனி நாளை தான் பாத்திரம் உணவு தரும் என்ற நிலையில் துர்வாசர் உள்ளிட்ட முனிவர்கள் காட்டில் தங்கியிருந்த பாண்டவர்களைக் காண வந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு தர உணவில்லையே என தர்மர் வருந்தினார். அவரைத் தேற்றிய திரவுபதி கிருஷ்ணரை வழிபட்டாள். காட்சியளித்த அவர் பாத்திரத்தை எடுக்க அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்தது. அதை தன் வாய்க்குள் இட்டார். உடனே அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் வயிறார சாப்பிட்டதைப் போல உணர்ந்தனர். பக்தியுடன் ஒரு பருக்கை படைத்தாலும் கடவுளின் அருள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி உதாரணம்.