மும்பை பாபுநாத் கோயில்
சிதிலமடைந்த, பூஜைகள் இல்லாத கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிேஷகம் செய்வதை அநாவர்த்தம் என்பர். அவ்வாறு திருப்பணி செய்யப்பட்ட கோயில் மும்பை செளபாத்தி பகுதியிலுள்ள பாபுநாத் கோயில்.இங்கு வாழ்ந்த வியாபாரியான பாண்டுரங் தன் நிலத்தில் விவசாயம் செய்ததோடு தான தர்மத்தில் ஈடுபாடு கொண்டவர். அவர் வளர்க்கும் பசு ஒன்று பால் கொடுக்காமல் இருந்தது. அதற்கான காரணத்தை தேடிய போது பசு இப்பகுதியில் உள்ள குன்றின் மீது ஓரிடத்தில் பால் சொரியக் கண்டார். அந்த இடத்தை தோண்டிய போது சிவலிங்கம், பார்வதி, விநாயகர், அனுமன் ஆகிய சிலைகள் கிடைத்தன. அவரே கோயிலை கட்டினார். இங்குள்ள சுவாமியான பாபுநாதரை தரிசித்தால் நிம்மதி கிடைக்கும். இக்கோயிலுக்கு பரோடா மகாராஜா திருப்பணி செய்துள்ளார். கடல்மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலில் சாதுக்கள் அதிகம் வசிக்கின்றனர். பக்தரான புஷ்ப தந்தா என்பவர் சுவாமி பாபுநாதர் மீது பாடல்கள் இயற்றியுள்ளார். இங்கு மூன்று வேளை பூஜை நடக்கிறது. சுவாமியை திங்கள் கிழமை தரிசிப்பது சிறப்பு. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.எப்படி செல்வது :மும்பை மரைன்லைன்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 5 கி.மீ., விசேஷ நாள்: திங்கள் கிழமை பிரதோஷம், சிவராத்திரி மாதப்பிறப்புதொடர்புக்கு: 022 - 2367 8367, 2367 3602நேரம்: காலை 6:00 - இரவு 10:00 மணிஅருகிலுள்ள தலம் : மகாலட்சுமி கோயில் 34 கி.மீ., நேரம் : காலை 6:00 - இரவு 10:00 மணிதொடர்புக்கு: 022 - 2351 4732, 2351 3831