உள்ளூர் செய்திகள்

கருட சேவை சிறப்பு தலங்கள்

பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடக்கிறது. இதை தரிசித்தால் மறுபிறப்பு இல்லை என்பர்.* திருப்பதியில் புரட்டாசி மாத நவராத்திரி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளிலும், ரத சப்தமியன்றும் கருட சேவையைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவர்.* புதுச்சேரி வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்ஸவத்தின் கருடசேவை புகழ்மிக்கது.* கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவில் கல் கருட சேவை.* காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கருட சேவை,* சென்னை மயிலாப்பூர் பார்த்தசாரதி கருட சேவை.* சிதம்பரம் அருகிலுள்ள திருநாங்கூரில் 11 திவ்யதேச பெருமாள்களின் கருட சேவை.* கும்பகோணத்தில் அட்சய திருதியையை ஒட்டி 12 வைணவக் கோவில்களின் பெருமாள்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 12 கருட சேவை.* தஞ்சாவூர் மாமணிக் கோவிலில் 23 வைணவக் கோவில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தரும் 23 கருட சேவை.* காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் தலத்தில் வைகாசி மாதம் ஒரே நேரத்தில் காட்சி தரும் 15 கருட சேவை.* மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் வைகையில் மண்டூக முனிவருக்கு கருடசேவை காட்சி.