உள்ளூர் செய்திகள்

உழைப்பில் தான் சுகம்

* எப்போதும் உழைத்துக் கொண்டிரு. அதில் தான் சுகமிருக்கிறது. வறுமை, நோய் முதலிய குட்டிப்பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.* தெய்வத்தை நம்பு. உண்மை பேசு. நியாயமான செயல்களைச் செய். எல்லா இன்பங்களையும் பெறுவாய்.* பொய் சொல்லக்கூடாது. பிறரது குறை பற்றி பேசக்கூடாது. தன்னையோ பிறரையோ புகழ்ந்து பேசக்கூடாது.* அன்பான உள்ளமே நல்ல உள்ளம். அன்புச் செல்வத்தின் முன்னால் பிற செல்வங்களுக்கு மதிப்பு கிடையாது.* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், நீயும், நானும், நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களும் தான் தெய்வம் என வேதம் சொல்கிறது. இதைத் தவிர வேறு தெய்வமில்லை.* தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய அத்தியாவசிய தேவைகளைத் தரும்படி அவரவர் குல தெய்வங்களிடம் மன்றாட வேண்டும்.* உடலை வெற்றி கொள். அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கக்கூடாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம். நீ யந்தரி (இயக்குபவன்).சொல்கிறார் பாரதியார்