உள்ளூர் செய்திகள்

59 வயது ஆகி விட்டதா? உங்களுக்கு இருக்குது ஒரு கோவில்

59 வயது ஆனவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ, திருச்சி அருகிலுள்ள உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவிலுக்கு வாருங்கள்.தல வரலாறுசாரமாமுனிவர் நந்தவனம் அமைத்து, மலர்களை சிவனுக்கு சூட்டி பூஜித்து வந்தார். ஒருசமயம் நந்தவனத்திற்கு வந்த ஒருவன், சில மலர்களைப் பறித்து மன்னனிடம் கொடுத்தான். மலரின் அழகில் லயித்த மன்னன், தனக்கும் தினமும் அந்த மலர்கள் வேண்டுமென சொல்லவே, அவனும் மலர்களை முனிவருக்கு தெரியாமல் பறித்துச் சென்றான். மலர் திருடுபோவதை அறிந்த முனிவர், மன்னனிடம் முறையிட்டார். மன்னர் அவர் சொன்னதைக் கண்டுகொள்ளவில்லை. வருந்திய முனிவர், சிவனை வேண்டவே அவர் அவ்வூரில், மண் மழை பொழியச் செய்தார். ஊர் அழிந்தது. முனிவராக இருந்தும் தனது கோபத்தால், மக்கள் அழிவைச் சந்தித்தால் வருந்திய முனிவர், மனநிம்மதிக்காக இங்கு சிவனை வேண்டி தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சிவன் மன அமைதி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடமான உய்யக்கொண்டான் திருமலையில், இந்த சம்பவத்தின் நினைவாக கோச்செங்கட்சோழன் கோவில் கட்டினான்.ஆயுள் நீடிக்க வழிபாடு16 வருடங்கள் மட்டுமே வாழும்படியான வரம் பெற்ற மார்க்கண்டேயர், இங்கு வந்து சிவனிடம் ஆயுள் நீடிப்பு வேண்டி முறையிட்டார். சிவனும் அவருக்கு என்றும் 16 வயதுடன் திகழ வரம் கொடுத்தார். மார்க்கண்டேயர் தன் பாதுகாப்பில் இருப்பதை உணர்த்தவும், எமனுக்கு எச்சரிக்கை கொடுக்கவும், எமதிசையான தெற்கு நோக்கி திரும்பினார். இதனால் கோவில் வாசல் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் சிவபாதம், கொடிமரம், நந்தி உள்ளது.ஆயுள் விருத்தி அபிேஷகம்ஆயுள்கண்டம் தீர 59 வயது பூர்த்தியானதும், தங்கள் நட்சத்திரம் வரும் ஒரு நாளில் இங்கு சிவனுக்கு பாலபிஷேகம் செய்து, அதை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். சிவபாதத்திற்கு பானகம் வைத்தும் வழிபடுவார்கள்.உயிர்கொண்டார்மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, 'உயிர்கொண்டார்' என்ற பெயர் ஏற்பட்டது. சமஸ்கிருதத்தில் 'உஜ்ஜீவநாதர்' என்பர். இதற்கு ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பவர்' என பொருள். ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகமும் உண்டு.அதிசய நிகழ்வுஇந்த மலைக்கோவில் 'ஓம்' வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னிதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் நீங்க இவளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தை மாதத்தில் ஏதாவது ஒரு நாள் மாலையில் உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி மீது சூரிய ஒளி விழும். அன்று முதல் 90 நாட்களுக்கு ஒருமுறை என வருடத்தில் 4 முறை சூரிய ஒளி படும். இது ஒரு அதிசய நிகழ்வு. பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், 'திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!' என வேண்டிப் பாடினார். கல்வி அபிவிருத்திக்காக இவரை வணங்கி வரலாம்.சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனீஸ்வரர் பிரகாரத்தில் உள்ளனர். இங்கிருந்து 3 கி.மீ., துாரத்தில் வயலுார் முருகன் கோவில் உள்ளது.இருப்பிடம்: திருச்சி - வயலுார் சாலையில் 7 கி.மீ., சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து உண்டு. நேரம்: காலை 8:00 - 12:00 மணி மாலை 4:30 - 8:00 மணி. அலைபேசி: 94436 50493.