உள்ளூர் செய்திகள்

சந்தோஷமாக வாழலாம்

பிப்.18 - பிறந்த நாள்* ஆசைகளை குறைத்தால் சந்தோஷமாக வாழலாம். * மனதில் இருப்பதை உனது கண்களே பிறருக்கு தெரியப்படுத்திவிடும்.* ஆராய்ச்சி செய்தால் கடவுளை அறிய முடியாது. * தீயவர்களுக்கு உதவி செய்யாதே. அது பாவத்திற்கு சமம். * காலையில் திருப்தியாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிடு. * துன்பத்தை ஏற்றுக்கொள். பொன் போல ஒளிர்வாய். * ஒருவரை நம்பினால் அவரது வார்த்தையில் நம்பிக்கை வை. * ஒரு செயலை தொடங்கினால் அதை முழுமையாக முடி. * படிப்பதை விட ஒரு விஷயத்தை கேட்டால் மனதில் நன்றாக பதியும். * பிறருடைய குணத்தை பற்றி பேசி, நேரத்தை வீணாக்காதே. * ஒருவர் செய்வதை பார்த்து அப்படியே செய்யாதே. உனக்கு தெரிந்ததை செய். * பேசுவதை விட அதிகமாக கேளு. கேட்பதை மனதில் நிறுத்து. * தொடர்ந்து பயிற்சி செய். முயற்சியில் வெற்றி பெறுவாய். * உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக செயல்படாதே. * பலனை எதிர்பார்த்து அன்பு செலுத்தாதே. * ஆசையற்ற ஞானிகள் மீண்டும் பிறப்பதில்லை. என்கிறார் ராமகிருஷ்ணர்