உள்ளூர் செய்திகள்

கடவுளை அடைய...

* பக்தி மார்க்கமே கடவுளை அடைய எளிய வழி.* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்தும். * அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவரின் மனம் சமநிலை இழப்பதில்லை. * உண்மையையும், பொய்யையும் பிரித்து அறிய பழகு. * ஏழைக்கும் ஏழையாக இருப்பதே நல்லது. * பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண மனம் ஏங்க வேண்டும்.* பொய் இருக்குமிடத்தில் எல்லா தீமைகளும் இருக்கும்.* தீமைக்குப் பதிலாக தீமை செய்வது கூடாது. * நல்லவர்களின் சேர்க்கையால் மனம் துாய்மை அடையும். * சம்பாதித்த பணத்தை பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்-. * விடாமுயற்சி இருந்தால் உலகில் எல்லாம் சாத்தியமே.* உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம். * விவேகம் இல்லாதவனை அறிஞன் என்று சொல்லக் கூடாது.* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.* தீயவைகளை எதிர்த்து செயல்படாமல் இருப்பது கூட அறியாமையே. வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ணர்