உள்ளூர் செய்திகள்

இன்றைய செயல்பாடுகளே எதிர்கால வாழ்வின் ஆணிவேர்

ஏப்., 24 சாய்பாபா நினைவு நாள்!* மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இதனைக் கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை.* பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.* ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.* திட்டங்களை செயல்படுத்துவதில் வரைமுறையுடன் செயல்படாத நாடு ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் செல்லாது.* கடவுளே அனைத்திலும் அனைத்துமாக இருந்து உலகை இயக்குகிறார். * நல்ல எண்ணம், வார்த்தையில் மென்மை, செயல்களில் இரக்கம் கொண்டவர்களே உண்மையான மனிதர்கள்.* எந்தச் செயலையும் செய்யும் முன்பு, கடவுளை எண்ணித் துவங்குங்கள். உங்களுக்கு அவரருளால் வெற்றியே கிடைக்கும்.* மனிதனின் அறிவாற்றலை, அவனது குணங்களே நிர்ணயிக்கிறது.* இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.* உண்மையாக நடப்பவர்களிடம் நற்குணமும், பிறருடன் இணக்கமாக நடந்து ஒத்துப்போகும் தன்மையும் இருக்கும்.* ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தாலே போதும். உலகில் அமைதி தானாக வந்துவிடும்.* உண்மையான நட்பில் அகம்பாவம் துளியும் இருக்காது.* தியானம் செய்வதால் ஆக்கப்பூர்வமான நற்சிந்தனைகள் உருவாகும்.* நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைப்பார்.* சேவை, கைமாறு கருதாததாக இருக்க வேண்டும். பிறருக்கு செய்த சேவையை வெளிப்படுத்துவதும், அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது.* ஒவ்வொருவரையும் பிறருக்கு சேவை செய்வதற்காகவே இறைவன் படைத்துள்ளான்.* நீங்கள் கடவுளை வணங்காவிட்டாலும்கூட, அவர் உங்களுடனேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.* மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்.* உண்மை இருக்குமிடத்தில் மட்டுமே அன்பும், அமைதியும், அதன் வடிவமான கடவுளும், அவரது ஆசிர்வாதமும் இருக்கிறது. * இறைவன் மீது பக்தி செலுத்துபவர்கள் மட்டுமே, எந்த செயலையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.* உண்மையான மகிழ்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளியில் தேடுவதில் ஒரு பயனும் இல்லை.* கட்டளையிடாமல், அன்புடன் சொல்லித் தரப்படும் முறையே, சிறப்பானகல்வி முறை ஆகும்.* பற்றில்லாத வாழ்க்கையில்தான் திருப்தி இருக்கிறது.* சேவை செய்யப்படும் இடத்தில் மட்டுமே பெரு மகிழ்ச்சியும், துன்பமில்லாத நிலையும் இருக்கும்.சொல்கிறார் சாய்பாபா