உள்ளூர் செய்திகள்

கடவுள் இருக்கும் இடம்

* தர்மம் உள்ள இடத்தில் கடவுள் இருப்பார். * தர்மம் வகுத்த வழியில் பணம் தேடு. வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்து. * கடவுளை சரணடைவதே கல்வி கற்றதன் பயனாகும். * பேராசையை கைவிடு. இல்லையென்றால் அது உன் அறிவை அழித்துவிடும். * தர்மத்தில் நம்பிக்கை கொள். அப்போதுதான் உனக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படும். * ஒழுக்கமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நற்கதி உண்டு. * உழைத்த பணத்தில் தர்மம் செய்தால், நல்ல வாழ்க்கை காத்திருக்கும். * வீணாக பேசாமல் கடவுளின் பெயரைச் சொல். * பிறவிக் குணம் என்பது எப்போதும் ஒருவரை விட்டு அகலவே அகலாது. * வேதாந்தத்தம் என்பது உண்மை. அதை அடக்கம் எனவும் கூறலாம். * புத்தியால் மனதை அடக்கினால், வெற்றி உறுதி. * கோபத்தை கைவிட்டால் துன்பமே வராது. * புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக்கூட தடுமாறச் செய்துவிடும். * பிறருடைய குற்றத்தை மன்னிப்பவன் மனிதன். அதை மறப்பவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.சொல்கிறார் வியாசர்