உண்மையான ஞானி யார்
ஆகஸ்ட் 16 நினைவு நாள்* எந்த நிலையிலும் கலங்காதவன் உண்மையான ஞானி.* கடவுளை வெளியில் தேடாதே. அப்படி செய்தால் அது அறியாமை. * கடவுளின் அருள் இருந்தால், அறியாமையில் இருந்து விடுபடலாம். * ஆணவத்துடன் செயல்பட்டால் கடவுளை நெருங்க முடியாது. * பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண்பதற்கு மனம் ஏங்க வேண்டும்.* பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம். * பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் அர்த்தம் இல்லை.* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு உதவி செய்யும். * அமைதியே ஞானத்தின் முதல் அடையாளம்.* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு கொடு. மனம் சமநிலையில் இருக்கும். * உண்மையையும், பொய்யையும் பிரித்து அறிய பழகு.* விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எதுவும் சாத்தியமே. * உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம்.* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு. சொல்கிறார் ராமகிருஷ்ணர்