பூஜைக்கு கடவுள் மயங்குவாரா?
* கடவுளை வணங்க வெறும் பூஜை முறைகள் பயனில்லை. முதலில் மனதை சுத்தமாக்குங்கள். துாய்மையான மனதை நோக்கி கடவுளே ஓடி வருவார். * மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று கண்ணீர் வடிக்கிறோம். * பணத்திற்காக ஏங்கித் தவிக்கிறோம். ஆனால், கடவுளுக்காக நாம் யாரும் அழத் தயாராயில்லை. கடவுளை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மனதில் பிறந்துவிட்டால், கடவுள் காட்சியை நாம் தெளிவாக காண முடியும்.* மனிதனுக்கு, தான் விரும்பும் பொருள்களில் உள்ள பற்று, தாய்க்கு தன் குழந்தையிடம் உள்ள பாசம், கணவனிடம் மனைவி கொள்ளும் காதல் ஆகியன மிக ஆழமானவையாகும். இம்மூன்று கவர்ச்சிகளும்ஒருங்கே அமையுமானால், அந்தமனஆற்றலே அவனை கடவுளிடத்தில் சேர்க்கும்.* கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால் உருவம் தெரியாது. அதுபோல, மனதில் அழுக்கு படிந்திருந்தால் கடவுள் நமக்கு தெரிய மாட்டார்.* கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் வரும் வரையில், மனிதனுக்கு பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.* கடவுள் மனிதனின் மனதில் தங்கியிருக்கிறார். அந்த விடுதியை பத்திரப்படுத்திக் கொள்வது தான், மனிதனின் தலையாய கடமை.பதிலளிக்கிறார் ராமகிருஷ்ணர்