உள்ளூர் செய்திகள்

நட்புக்கு ஓர் அடையாளம்

கிருஷ்ணரின் நண்பர் குசேலர். ஏழ்மையில் வாடிய அவர், கிருஷ்ணரது அருளால் வளமுடன் வாழ்ந்தார் என்பது நாம் அறிந்ததே. சுதாமர் எனப்படும் இவருக்கும் ஒரு கோயில் உண்டு என்பது தெரியுமா?குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ளது சுதாமர் கோயில். இங்குள்ள சுவர்களில் கிருஷ்ணரின் லீலைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் குசேலர் அன்புடன் தரும் அவலை, கிருஷ்ணர் ஆவலுடன் சாப்பிடும் காட்சியையும் காணலாம். இதை நினைவுபடுத்தும் வகையில் இங்கு பிரசாதமாக அவல் தரப்படுகிறது. நட்புக்கு ஓர் அடையாளமாகத் திகழ்கின்றது இக்கோயில்.