உள்ளூர் செய்திகள்

தீவுக்குள் ஒரு தீர்த்தம்

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தீவுத் தலம் ராமேஸ்வரம். இங்கு ராமநாதசுவாமி மூலவராக அருள்பாலிக்கிறார். ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் சிவபூஜை செய்ய ஏற்பாடானது. கைலாயத்தில் இருந்து சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மணலில் லிங்கம் அமைத்தாள். இவரே ராமநாதர் என பெயர் பெற்றார். பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலப்புறத்தில் உள்ள சன்னிதியில் இருக்கிறாள். இங்குள்ள 1200 தூண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது. கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் கிணறு வடிவில் உள்ளன. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. ஆடி அமாவாசையன்று நீராடி முன்னோருக்கு திதி கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.