ஒருநாளில் ஓராண்டு பலன்
UPDATED : ஜூலை 29, 2016 | ADDED : ஜூலை 29, 2016
காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி என்னும் ஐந்து ஆறுகள் பாய்கின்ற சிவத்தலம் திருவையாறு. இங்குள்ள சிவன் ஐயாறப்பர் எனப்படுகிறார். அம்பிகையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. இக்கோவிலிலுள்ள சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியவை சிறப்பு மிக்கவை. சூரியதீர்த்தத்தில் மூழ்கி எழுந்த திருநாவுக்கரசர், கைலாயம் சென்றதாக கூறுவர். காவிரியாற்றில் உள்ள கல்யாண சிந்து என்னும் படித்துறையில் நீராடினால் ஓராண்டு காவிரியில் நீராடிய பலன் உண்டாகும். இங்கு ஆடி அமாவாசையன்று இரவில் அப்பர் கயிலை தரிசன வைபவம் சிறப்பாக நடக்கும். இந்நாளில் இங்கு நீராடி பிறவித்துன்பம் நீங்கப்பெறலாம்.