உள்ளூர் செய்திகள்

பிழை பொறுப்பாய்

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்துதியாப் பிழையும் தொழாப் பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே. நல்ல நுால்களை படிக்காமல் இருத்தல், தெய்வத்தின் கருணையை நினைக்காமல் இருத்தல், கடவுளின் சன்னதியில் நின்ற போதும் வழிபாடு செய்யாதிருத்தல், கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருத்தல், நமசிவாய மந்திரத்தை ஜபிக்காதிருத்தல், தலை, கை, உடலால் தெய்வத்தை பணியாதிருத்தல் என எத்தனையோ தவறுகளைச் செய்யும் என்னை மன்னிக்கவேண்டும் என காஞ்சி ஏகாம்பரேஸ்வரரிடம் வேண்டுகிறார் பட்டினத்தார். இரவில் துாங்கும் முன்பு இப்பாடலைப் பாடினால் தவறு செய்யும் எண்ணம் வராது. அதை திருத்திக் கொள்ளும் பக்குவம் ஏற்படும்.